இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, அமைச்சர் மட்டத்தில் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தப்படவுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், செப்டம்பர் 28ஆம் திகதி இலங்கையின் சார்பில் பொதுச் சபையில் உரையாற்றவுள்ளதாக தெரிவித்தார்.
இதற்காக அவர் செப்டம்பர் 26ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு புறப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த பொதுச் சபை கூட்டத் தொடரில் அரச தலைவராக ஜனாதிபதி பங்கேற்றிருந்த நிலையில், இம்முறை வெளிவிவகார அமைச்சரின் தலைமையில் இலங்கை பிரதிநிதித்துவம் இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.









