ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 24 பேரும் தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகள் தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவிடம் தாக்கல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி வழங்கப்படும் என நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது.
இந்த வழக்கை நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறி, நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.









