கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றிலிருந்து 463 கிலோகிராம் சந்தேகத்திற்கிடமான கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் (ICE) போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (CCIB) அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் பெருமளவிலான சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதி மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.









