சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் காலியில் தற்சமயம் நடைபெற்று வருகிறது.
போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி சற்றுமுன்னர் 193 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் ரிசப் பான்ட் 66 ஓட்டங்களையும், டேவ்டுட் படிக்கல் (Devdutt Padikkal) 44 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அசித்த பெர்ணாண்டோ (Asitha Fernando )4 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூரிய (Prabath Jayasuriya ) 3 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார (Lahiru Kumara )2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ஓட்டங்களையும், இலங்கை அணி 284 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.
இதற்கமைய, முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.









