கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர் ஊதாப்பூ ஏ.ஆர்.எப். சிமாரா அலி அவர்களின் இரண்டாவது நூலான ‘இளஞ்சிறகுகள்’ சிறுவர் கதைகள் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (15.08.2026) கொழும்பு தபால் கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரப் சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மனோ கணேஷன் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் ஏ.ஆர்.எம். அஷ்ரப் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். நூலின் முதற் பிரதியை சுங்க அத்தியட்சகர் உவைஸ் மொஹிதீன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் இலக்கியவாதிகள், மகளிர் அமைப்புகளின் தலைவிகள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அஷ்ரப் ஏ சமத்)அத்துடன், அகில இலங்கை ரீதியில் சிறுவர்களுக்கிடையே நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற 25 மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
விழாவில் தலைமையுரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரப் சிஹாப்தீன் நிகழ்த்தினார். நூல் நயவுரையை நாச்சியாதீவு பர்வின் மற்றும் டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி ஆசிரியை சகீக்கா பௌமி ஆகியோர் நிகழ்த்தினர். ஏற்புரையை நூலாசிரியர் ஊதாப்பூ சிமாரா அலி நிகழ்த்தினார்.
அஷ்ரப் ஏ சமத்














