இஸ்மதுல் றஹுமான்
42வது தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு கம்பஹா மாவட்ட பாடசாலை மற்றும் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான கலாச்சார போட்டி நிகழ்ச்சிகளின் வாய் மொழி போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் 2ஆம் திகதிகளில் திஹாரிய அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மேல் மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து நடத்தும் இக் கலாச்சார போட்டி நிகழ்ச்சியில் பேச்சு, கட்டுரை, கவிதை, சிறுகதை, கிரா அத், அல் குர்ஆன் மனனம், நஷீத், அதான் கூறல், அரபு எழுத்தணி, களிகம்பு, இஸ்லாமிய அறிவுக் களஞ்சியம் போன்ற போட்டிகள் தமிழ், சிங்களம், ஆங்கிலம், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் ஆண் பெண் இருபாலாருக்கும் கல்வி தரம், வயதெல்லை அடிப்படையில் நடைபெறுவுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் 21 பாடசாலைகள் மற்றும் 17 அரபு மதரஸாக்கள் இப் போட்டிகளில் பங்கு பற்றுகின்றன.
எழுத்துப் போட்டிகள் நேற்று புதன்கிழமை(29) கம்பஹா, மினுவங்கொட, நீர்கொழும்பு, களனி ஆகிய கல்வி வலயங்களில் அல் அஸ்ஹர் மஹா வித்தியாலயம், அல் பத்ரியா ம.வி., அல் அமான் ம.வி., அலிகார் ம.வி., அல் ்ஹிலால் ம.க., அல் பலாஹ் ம.வி., அல் அஷ்ரப் ம.வி., அல் முபாரக் தேசிய பாடசாலை என்பவற்றில் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் ஆகஸ்ட் 26ம் திகதி ஜனாதிபதி தலைமையில் நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தேசிய மீலாத் விழாவின் போது வழங்கப்படும்.








