இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு மாநகர சபை மேயர் சட்டதரணி ரொபட் ஹீன்கெந்த மேயர் பதவியிலிருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை 15.07.2026 மாநகர ஆணையாளருக்கு அனுப்பியுள்ளார்.
இராஜினாமா செய்த முதல்வர் ரொபட் ஹீன்கெந்த தனது தனிபபட்ட காரணத்தினாலேயே பதவியை துறந்ததாகவும் தனது குறிகிய கால சேவையில் தான் நீர்கொழும்பு பிரதேசத்திற்கு செய்துள்ள சேவை தொடர்பாக திருப்தியடைவதாக கூறினார்.
பதவியிலிருந்து விலக முன்னர் மேயர் தனது சக உறுப்பினர்களுடன் விஷேட சந்திப்பொன்றை நடத்தியதுடன் ஊழியர்களுடனும் பேசிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.
தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மேல்மட்ட அரசியல் அழுத்தத்தினாலேயே இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
தற்போதைய பிரதி மேயர் சாமர பிரனாந்து மேயராகவும் பிரதி மேயராக தேமச உறுப்பினர் சட்டதரணி எம்.என்.எம். பஸீர் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.








