(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கான பிரஜாசக்தி உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு (11.07.2026) கல்முனை
அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பஹ்ரைன் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒன்றியத்தின் உப தலைவரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அன்சார் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதோடு, விசேட அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராச்சி, கல்முனை பொலிஸ் பிரதம பரிசோதகர் அப்துல் வாஹிட், பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் அதன் அங்கத்தவர்கள் தேசிய மக்கள் கட்சியின் (NPP) கல்முனை செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.








