

ஏ.எஸ்.எம்.ஜாவித்
சமூக நீதிக் கட்சியும் ஏனைய அமைப்புக்கள்மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அமைதி ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் 16.06.2026 நண்பகல் நடைபெற்றது.
ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டறிந்து நீதியை நிலைநாட்டவும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளவும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் முழு ஆதரவு உண்டு எனவும் கொல்லப்பட்ட கத்தோலிக்க மக்களின் உறவுகளுக்கும் எமது பூரண ஆதங உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டது.
சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் அர்க்கம் முனீர் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணி ஹி ஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.









