ஏ.எஸ்.எம்.ஜாவித் 2026.05.28
ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகையும் குத்பா பிரசங்கமும் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் 28.05.2026 காலை நடைபெற்றது.
பள்ளிவாசலின் பிரதம இமாம் எஸ்.எம்.றிஸ்வான் (பஹ்ஜி) தொழுகையையும் குத்பா பிரசங்கத்தை மும் நிகழ்த்தினார். தொழுகையில் ஆண்கள்இ பெண்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் தாஹிர் ரஸீன் உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்கள் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தொழுகையின் பின்னர் ஒருவருக்கொருவர் சலாம் சொல்லி பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டமையையும் காண முடிந்தது.









