இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்களின் நற்சான்றிதழ் பத்திரங்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
20.04.2026 முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
பப்புவா நியூ கினியா சுதந்திர நாட்டின் உயர்ஸ்தானிகராக Vincent Sumale அவர்களும், சோமாலிய பெரடல் குடியரசின் தூதுவராக Abdullahi Mohammed Odowa, லக்சம்பர்க் குடியரசின் தூதுவராக Christian Biever, வத்திக்கானின் அப்போஸ்தலிக்க தூதுவராக Monsignor Andrzej Józwowicz, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) Nayyar Naseer, குவைத் நாட்டின் தூதுவராக Saleh Mubarak Al-Sarawi ஆகியோர் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களுடன் ஜனாதிபதி சுமூகமான உரையாடலில் ஈடுபட்டதோடு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.










