




கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் கொலன்னாவ பிரதேச உலமாக்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், கதீப்மார்கள் முஅத்தின்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு 18.03.2026 கொலன்னாவ புல்மன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.









