இஸ்மதுல் றஹுமான்
வறுமையும் அறியாமையும் இருக்கும் இடங்களில் குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக இருப்பதாகவும், அந்த சூழ்நிலையிலிருந்து மக்களை விடுவிக்க அரசாங்கம் ஒரு பெரிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது என கற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்
நீர்கொழும்பு வாவி திட்டத்தின் கீழ் கொத்தலாவல பாலத்திற்கு அருகில் புதிய மீன்பிடி படகுத்துறை மற்றும் படகு ஏவுதளம் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் ரத்ன கமகே பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பெர்னாண்டோ, நீர்கொழும்பு மேயர் சட்டத்தரணி ரொபர்ட் ஹீன்கெந்த, பிரதேச செயலாளர் ரசிக்கா மல்லவாராச்சி, அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்ட இந் நிகழ்வில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தொடர்ந்து உரையாற்றுகையில் கடற்றொழில் துறைக்கும் சுற்றுலாத் துறைக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்கொழும்பு களப்பைப் (Lagoon) பாதுகாக்கவும் அதன் இயற்கை அழகை மேம்படுத்தவும், 318.49 மில்லியன் ரூபா செலவில் புதிய இறங்குதுறை (Jetty) மற்றும் படகு ஏவுதளம் (Boat Launching Pad) ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை இன்று ஆரம்பித்தோம்.
எமது நாடு போதைப் பொருளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை யாரும் அறிவர். எமது பிள்ளைகளை குடிபோதையிலிருந்தும் போதைப் பொருள் பாவனையில் இருந்தும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இதற்காக பாரிய வேலை திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. மக்களிடம் கேட்டுக்கொள்வது விஷேடமாக மீனவ சமூகத்திடம் வேண்டிநிற்பது போதைப் பொருள் வியாபாரிகளுக்கு அடிபனிய வேண்டாம். வெளி நாடுகளிலிருந்து படகு இஸ்கீபர்களுக்கு செய்தி வருகின்றன இத்தனை கோடி தருகிறோம் இவ்வளவு இலட்சம் தருகிறோம் இந்த வேலையை செய்து தாருங்கள் என்று கூறி போதைபொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.
இஸ்கீபர்கள் இதற்கு இறையாகுவதனால் எமது எதிர்கால சந்ததியினர் நாசமாகின்றனர். இதனை தடுக்க முடியாமல் போய்விடும்.
மீனவ சமூகத்திற்கு பிரச்சினைகள் உண்டு. அவர்கள் வறுமை நிலையில் உள்ளனர். வறுமை எங்குள்ளதோ அங்கு கல்வி பாதிக்கப்படும். கல்வி மட்டம் குறையும் போது வறுமை வாட்டும்போது குடிபழக்கம், போதைப் பொருள் பாவனை அதிகரிக்கும்.
நீர்கொழும்பு களப்பு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு கருப்பொருளாக அமைந்த ஒரு அழகான இடமாகும். ஆனால் முறையற்ற விதத்தில் படகுகள் நிறுத்தப்படுவதால் அதன் அழகு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இறங்குதுறை நிர்மாணிக்கப்படுவதன் மூலம் படகுகளை முறையாக நிறுத்திவைக்க சந்தர்ப்பம் கிடைக்கும். இது மீனவர்களுக்கும் சுற்றுலாத் துறைக்கும் பெரும் உதவியாக அமையும்.
அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, தானும் அமைச்சரவையும் மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதாகவும், அமைச்சர்களின் வரப்பிரசாதங்களைக் குறைத்து அந்தப் பணத்தை நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்துவதாகவும் வலியுறுத்தினார்.










