புத்தளம் ரயில் பாதையிலான ரயில் சேவைகள், 16.02.2026 முதல் புத்தளம் ரயில் நிலையம் வரை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, நாளை முதல் புத்தளம் ரயில் பாதை முழுமையாகத் திறக்கப்படவுள்ளதுடன், கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் வரை ரயில்கள் இயக்கப்படும் என அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
‘டிட்வா’ (Ditwa) சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தப் பாதையிலான பயணிகள் ரயில் சேவைகள், பல கட்டங்களின் கீழ் நீர்கொழும்பு, கொச்சிக்கடை, நாத்தாண்டிய, குடாவெவ ஆகிய ரயில் நிலையங்கள் வரை நீடிக்கப்பட்டிருந்தன.
இறுதியாக டிசம்பர் 29ஆம் திகதி சிலாபம் ரயில் நிலையம் வரை சேவைகள் நீடிக்கப்பட்டன.
சிலாபம் மற்றும் புத்தளம் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள பத்துளுஓயா பாலத்திற்கு அருகில் ரயில் பாதை நீரில் அடித்துச் செல்லப்பட்டமை, தில்லடிய உப ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டமை, மானுவன்கம உப ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பல இடங்களில் தெதுரு ஓயாவினால் ரயில் பாதைக்குக் கீழ் பகுதி அரிப்புக்குள்ளானமை போன்ற பாரிய அனர்த்தங்கள் காரணமாகவே புத்தளம் வரையான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
எனினும் 16.02.2026 முதல் பின்வருமாறு பயணிகள் ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன,









