“முழு நாடும் ஒன்றாக” தேசிய விசேட சோதனை நடவடிக்கையின்போது 07.02.2026 777 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சோதனையின்போது ஹெரோயின் 434 கிராமும் ஐஸ் 477 கிராமும் கொக்கெய்ன் 2 கிராம் 536 மில்லி கிராமும் கஞ்சா 5 கிலோ கிராம் 658 கிராமும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், 09 சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
அத்துடன், 15 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளனதுடன் 19 நபர்களைப் புனர்வாழ்விற்கு உட்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.










