பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஊழல் தொடர்பான இரு வழக்குகளுக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரச வீட்டு திட்டத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு இடம்பெற்றதற்காக பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட பலர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த நிலையில் இரு வழக்குகளில் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஒரு வழக்கு நிலம் வழங்கியதில் முறைகேடு. மற்றொரு வழக்கு ரஜுக் புதிய நகரம் திட்டத்தின் கீழ் அடுக்குமாடிகளை ஒதுக்கியதில் இடம்பெற்ற முறைகேடு ஆகும்.










