இஸ்மதுல் றஹுமான்
துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இலங்கை பயணி ஒருவரிடமிருந்து 13 இலட்சத்து14 ஆயிரத்து 400 ரூபா மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளைத் திருடிய சீன நாட்டவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மிகுந்த முயற்சிக்குப் பிறகு 13ம் திகதி மாலை கைது செய்தனர்.
பொரலஸ்கமுவவைச் சேர்ந்த இஸ்ரேலில் சிறுவர் மேம்பாட்டு ஆலோசகராகப் பணிபுரியும் 52 வயதான பெண் அபுதாபியிலிருந்து ஃப்ளைடுபாய் எம். இசட்.-579 இலக்க விமானத்தில் 13ம் திகதி காலை 08.15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவர் பயணத்தின் போது அவரது கைபையை விமானப் பனிப்பெண்ணின் வேண்டுகோளுக்கு இனங்க இருக்கைக்கு மேல் உள்ள பயணப்பொதிகள் வைக்கும் இடத்தில் வைத்துள்ளார்.
விமானத்தில் இருந்து வெளியே வந்து விமான நிலைய வாடகை வாகனத்தைப் பெற்றுப் கொள்வதற்கு பணத்தை செலுத்துவதற்காக கைபையை திறந்த போது அதிலிருந்த 3660 அமெரிக்க டொலர்கள், 500 யூரோமற்றும் நகைகளை கானவில்லே.
இது தொடர்பாக அப்பெண் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எல்மோ மெல்கம் பேட்டின் ஆலோசனையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜீவரத்ன, உப பொலிஸ் பரிசோதகர் சந்தன,பொலிஸ் சார்ஜன் தகநாயக்க(38226), பொலிஸ் கான்ஸ்டபல் மதுசங்க(28167) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் இது தொடர்பாக உடன் செயல்பட்டு சிசிரிவி கமராக்களை பரிசோதித்து போது அவருக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய சீன நாட்டவரை அடையாளம் கண்டுள்ளனர்.
பின்னர் அவரைப் பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டுபிடித்த பொலிஸார் அவர் ஏற்கனவே விமான நிலையத்திலிருந்து தப்பிச் சென்று நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பகுதியில் ஒரு சீனப் பெண் நடத்தும் விடுதியில் மறைந்திருந்த போது 25 வயதான அந்த சீன நாட்டவரை சந்தேகத்தில் கைது செய்து பரிசோதனை செய்த வேளையில் அவர் தூங்கிய
தலையணை உறைக்குள் மறைத்து வைத்திருந்த அனைத்து வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
கைது செய்யப்பட்ட சீன நாட்டவரை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.










