

( ஐ. ஏ. காதிர் கான் )
சோசியல் டிவியின் 2025 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு, தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சோசியல் டிவியின் பணிப்பாளர் முஹம்மட் சிறாஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிந்தக்க அபேவிக்கிரம பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
கெளரவ அதிதியாக 24 படைப்பிரிவின் தலைமையக இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கே.டபிள்யூ. ஜயவீர , விஷேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில், இலங்கையைச் சேர்ந்த ஊடகம், இலக்கியம், தொழில் முயற்சி போன்ற பல் துறை ஆளுமைகள் 55 பேருக்கு விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெருந்திரளான ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











