புத்த பெருமானின் முதலாவது இலங்கை விஜயம் உள்ளிட்ட சாசன வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்ற துருது பௌர்ணமி (போயா) தினம் இன்றாகும்.
இது இவ்வருடத்தின் முதலாவது பௌர்ணமி தினம் என்பதும் விசேட அம்சமாகும்.
சுமன சமனரின் அழைப்பின் பேரில் புத்தர் இலங்கைக்கு விஜயம் செய்தமை மற்றும் அவருக்கு கேச தாதுக்கள் வழங்கப்பட்டு, அவற்றை பொக்கிஷமாக வைத்து மஹியங்கனை ஸ்தூபி நிர்மாணிக்கப்பட்டமையும் ஒரு துருது பௌர்ணமி தினத்தில் இடம்பெற்றதாக சாசன வரலாறு குறிப்பிடுகிறது.
இதற்கிடையில், FM தெரணவின் 129 வது “அசபுவ” போயா தின நேரடி ஒளிபரப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க அலவல பொத்குல் லென் ரஜமஹா விகாரையிலிருந்து இன்று நாள் முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது.









