கண்டியில் உள்ள சட்டவிரோத நடைபாதைகளை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை நேற்று (02.01.2026) காலை முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் இந்த நடவடிக்கை தொடர்பில் கண்டி மாநகர சபை அறிவித்திருந்தது.
அதன்படி, கண்டி, பேராதனை, கட்டுகஸ்தோட்டை நகரங்களிலுள்ள சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு மாற்றீடாக போகம்பறை பகுதியில் இடம் வழங்கப்பட்ட போதிலும் அப் பகுதி மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் அங்கு வியாபாரம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாக நடைபாதை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.










