இலங்கை மற்றும் சுற்றுலா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் மூலம் கிடைக்கும் வருமானத்தை ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள மீட்பு மற்றும் புனர்வாழ்வு பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, இத்தொடரின் போது #VisitSriLanka எனும் ஹேஷ்டேக் (Hashtag) மூலமான பிரசாரத்தை முன்னெடுக்கவும் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடர் ஜனவரி 7, 9 மற்றும் 11 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், அனைத்துப் போட்டிகளும் தம்புள்ளையில் நடைபெறவுள்ளன.










