சில தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒருநாள் சம்பளத்தை Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.
பொகவந்தலாவை கொட்டியாகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்களே “டித்வா” புயலினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் நிதியத்திற்கு தமது நிதியை வழங்கியுள்ளனர்.
அதற்கமைய குறித்த நிதியத்திற்கு 108,000 ரூபாவினை பொகவந்தலாவை கொட்டியகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வொன்று 27.12.2025 இடம்பெற்ற நிலையில், அதில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீர மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.










