அனர்த்தம் காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதவர்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவுப் பொருட்கள்.
இன்று பிற்பகல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கவனம் செலுத்தி, அவர்களின் பல பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத மீனவக் குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவுப் பொருட்களை வழங்குமாறு இங்கு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்திய மீன்பிடிப் பிரச்சினை மற்றும் மீனவ மக்களின் உரிமைகள் குறித்தும் ஜனாதிபதி தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
கட்டுக் கரைக் குளம்
மற்றும் சரணாலயத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் அத்துமீறிக் காணிகளைக் கைப்பற்றியவர்கள் தொடர்பாக சட்டங்களை அமல்படுத்தவும், மன்னார் பகுதியில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான நிரந்தரத் திட்டத்தை செயல்படுத்தவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டுறவு அபிவிருத்தித் துணை அமைச்சர் உபாலி சமரசிங்க, மக்கள் பிரதிநிதிகள், மற்றும் அரச அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
ஊடகச் செயலாளர்
கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு










