

இன்று 11/12/2025, ISRC அமைப்பானது, புத்தளம் கரம்பை கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட ஹுஸைனியாபுரம் எனும் கிராமத்தில், அதனைச் சூழவுள்ள சுமார் எட்டு கிராமங்களை மையப்படுத்திய பாரிய இலவச மருத்துவ முகாமை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இதில், எமது கடந்த ஏனைய மருத்துவ முகாம்களில் பதிவான எண்ணிக்கையை விடவும், சுமார் 950 நோயாளிகள் பெருமளவில் கலந்துகொண்டு, முழுமையான மருத்துவ சேவைகளையும் பெற்றுப் பயனடைந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இம்முகாமில் இரத்த அழுத்தம், சீனி, நிறை (உடல் எடை) பரிசோதனை, விரிவான வைத்திய பரிசோதனை, இலவச மருந்துகள் விநியோகம், அத்துடன் உளவள ஆலோசனை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன.
மேலும், இம்முகாமை நடத்துவதற்கு இடமளித்து, உரிய ஏற்பாடுகளைச் செய்து, பூரண ஒத்துழைப்பு வழங்கிய மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகிகள், அதன் தன்னார்வத் தொண்டர்கள், RDHS, MOH, MS, PHI, GA, GS, DO, உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இம்மருத்துவ முகாமை, மருத்துவர்கள் (Doctors), மருத்துவ மாணவர்கள் (Medical Students), மருந்தாளர்கள் (Pharmacists) மற்றும் தாதிகள் (Nurses) ஆகியோரின் பங்களிப்பு இன்றி வெற்றிகரமாக செய்து முடிப்பது சாத்தியமற்றதாகும்.
தொடர்ந்து எமது மருத்துவ முகாம்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் இவர்கள், எமது முக்கியமான அஸ்திவாரம் என்று கூறினால் அது ஒருபோதும் மிகையாகாது.
தூரப் பிரதேசம், இறுக்கமான பணி அட்டவணை (Work Shedule), அதிகாலை, இரவு, வேலை நாள், சிரமம் என எதையும் பாராது எமது மருத்துவ முகாமுக்குத் தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் இவர்களைப் போற்றிப் பாராட்டுவதில் நாம் பேரானந்தம் அடைகிறோம்.
அத்துடன், குறிப்பாக நாளாந்தம் வெவ்வேறு பிரதேசங்களை மையப்படுத்திய தொடர் மருத்துவ முகாம்களுக்கு சிரமங்களைச் சற்றும் பொருட்படுத்தாது, உடல் மற்றும் உளரீதியான தயாரிப்புடன், அர்ப்பணிப்பு மற்றும் தியாக உணர்வுடன் பணியாற்றும் ISRC ஊழியர்களாகிய (எமது தூண்களான உத்தியோகத்தர்கள்) அனைவருக்கும் எமது கோடான கோடி நன்றிகள்.
நன்றி.
Azhan Haneefa
Deputy CEO-ISRC











