சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து நிறுவனங்களும் பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த முதலாம் திகதி முதல் உரிய நிறுவனங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய தெஹிவளை மிருகக்காட்சிசாலை , பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருகக்காட்சிசாலை மற்றும் ரிதியகம சஃபாரி பூங்கா என்பவற்றை இவ்வாறு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நிலவிய சீரற்ற வானிலையுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக, விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து நிறுவனங்களையும் தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.









