இஸ்மதுல் றஹுமான்
வெள்ளத்தில் சிக்குண்டவர்களுக்கும் அவர்களுக்கு உதவி செய்ய வெள்ள நீரில் இறங்கிச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கும் எலிக்காய்சல் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக மருந்து வில்லைகளை நீர்கொழும்பு மாநகர சபை சுகாதார பிரிவு இலவசமாக வழஙகி வருகின்றது.
பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்பட்டதிலிருந்து முழு மூச்சாக இயங்கும் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சரூஜ் சத்தார் தலைமையிலான “வீ ஆர் ரெடி”( We are ready) குழுமத்தினரின் ஏற்பாட்டில் பொது சுகாதார பரிசோதகர்களான மஞ்சுல ஹேவாவசம், மொகமட் முஸ்தகீம் ஆகிய இருவரும் நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வருகை தந்து Doxycycline டொக்சிசிலின் வில்லைகளை தேவையானவர்களுக்கு வழங்கிவருகின்றனர்.
கால்களில் காயங்கள் உள்ளவர்களும் சீறு கீரல் உள்ளவர்களும் நீரில் இறங்கிச் செல்வதனால் எலிக் காய்சலுக்கான தொற்று உட்செல்ல வாய்புள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எலி காய்சலால் பீடிக்கபட்ட மூவர் நீர்கொழும்பில் அடையாளம் காணப்பட்டதனால் வருமுன் காப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர்கள் கூறினர்.










