இஸ்மதுல் றஹுமான்
தொடர்ச்சியாக பெய்யும் பலத்த மழையினால் நீர்கொழும்பில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தொண்டர் அமைப்புகள் படகுகளை பயன்படுத்தி வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நீர்கொழும்பு கட்டான தொகுதிகளின் எல்லையில் அமைந்துள்ள தெபாஎல மற்றும் சிறு ஓடைகள் பெருக்கெடுத்ததில் நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் கோமஸ்வத்த, றப்பர்வத்த, செல்லகந்த, தெனியவத்த, தழுபொத்த, மைமன்கொடல்ல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி வீடுகளுக்கு
நீர் புகுந்துள்ளன.
சமூக சேவா அமைப்புகள் சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக அல் ஹிலால் மத்திய கல்லூரி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வீடுகளிலில் வெளியேறியவர்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
நீர்கொழும்பு மாநகர சபையின நிவாரண உதவிகளை வழங்குவதற்காக ஏற்பாடகளை செய்துள்ளது.
பாதிக்ககப்பட்டவர்களின் விபரங்களை கிராம உத்தியோகத்தர்களை சேகரித்து வருகின்றனர்.










