களுகங்கை ஆற்றுப்படுகையில் தற்போது கிடைத்து வரும் அதிக மழை வீழ்ச்சி மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் களுகங்கை ஆற்றுப்படுகையில் மேற்கொள்ளப்பட்ட தரவுப் பகுப்பாய்வுக்கு அமைய, அடுத்த சில மணிநேரங்களில் பாரிய வெள்ள நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்ல, நிவித்திகலை, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் எலபாத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொடை, மில்லனிய, புளத்சிங்கள, பாலிந்தநுவர, மதுராவல மற்றும் அகலவத்தை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் களுகங்கையின் தாழ் நிலங்களில் வௌ்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அதன் வழியாகப் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.










