இலங்கை மத்திய வங்கியின் இலட்சினையைத் தவறாகப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் மோசடியான வியாபாரங்கள் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இது தொடர்பில் மத்திய வங்கி தெளிவூட்டலொன்றை விடுத்துள்ளது.
அதில், மோசடியான வியாபாரங்கள் எவற்றுடனும் இலங்கை மத்திய வங்கிக்கு தொடர்பு இல்லை. இத்தகைய மோசடியான வியாபாரங்களுக்கு அகப்பட்டு உங்களுடைய எஞ்சியுள்ள பணத்தை இழக்காதீர்கள். இது இலங்கை மத்திய வங்கி வழங்கும் செய்தி” என குறிப்பிடப்பட்டுள்ளது.










