ஜனவரி முதல் பாடசாலை வாகனங்களுக்கு சிசிடிவி கட்டாயமாக்கப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதல் பாடசாலை மற்றும் அலுவலக வாகனங்களுக்கு வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்படும்.
மேலும், பாடசாலை வாகனங்களுக்கு சிசிடிவி கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறித்த சிசிடிவி காட்சிகள் உறவினர்கள் பார்க்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.










