அரச வைத்தியசாலைகளில் நுண்ணுயிர் கொல்லி, மயக்க மருந்து, சுவாச நோய்க்கான மருந்து, தொற்றா நோய்க்கான மருந்து, வலி நிவாரணி, கண் நோய்களுக்கான மருந்து என சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நோயாளர்களுக்கு சிகிச்சைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கு தரமான மருந்து வகைகளை விநியோகிப்பது அவசியம்.
அதன்படி, மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள், இரசாயன பரிசோதனைகளுக்கான உபகரணங்கள், கதிரியல் பரிசோதனைகளுக்கான உபகரணங்கள் ஆகியவற்றை சரியான நேரத்தில் பெற்றுத்தருவது அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் பொறுப்பாகும் எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால், தற்போது வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது










