ஏ.எஸ்.எம்.ஜாவித்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஹஜ் உம்ரா குழு இணைந்து, 2026 ஆம் ஆண்டில் ஹஜ் புனித யாத்திரையை மேற்கொள்வதற்கு திணைக்களத்தில் பதிவு செய்துள்ள அம்பாறை, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த யாத்திரிகர்களுக்கான முதல் கட்ட கருத்தரங்கு 2025 நவம்பர் மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் ஐந்து அமர்வுகளாக நடை பெற்றன.
ஏறாவூர் பிரதேச செயலம் ,காத்தான்குடி பிரதேச செயலம் ,அக்கரைப்பற்று பிரதேச செயலம் ,சம்மாந்துறை பிரதேச செயலம் ,கல்முனை பிரதேச செயலகங்களில் மேற்படி கருத்தரங்குகள் இடம்பெற்றன.
மேற்படி நிகழ்வில் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ், ஹஜ் உம்ரா குழு உறுப்பினர் வை.எல்.எம். நவவி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எம்.ஐ.பிர்னாஸ்,கணக்காளர் எஸ்.எல்.எம்.நிப்ராஸ் ஆகியோர் வளவாளர்களாகவும், ஹஜ் பிரிவை சேர்ந்த உத்தியோகத்தர்களான கே.ஏ. சப்ரி, எம்.ஐ. கியாஸ் மற்றும் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் இதில் அதிகளவிலான யாத்திரிகர்கள் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இக் கருத்தரங்கில் 2026 ஆம் ஆண்டு ஹஜ் செல்லவுள்ள யாத்திரிகர்களுக்கு ஹஜ் கடமைகளை முறையாக நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப் பட்டதுடன், சவூதி அரேபியாவில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் கலந்துரையாடப்பட்டது.










