மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு தெரிவுக் குழுவை நியமிக்கவுள்ளதாக சபை முதல்வர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வாய்மொழி மூலம் பதில் கோரி சமர்ப்பித்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
“பொது நிர்வாக அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தின்போது, பொது நிர்வாக அமைச்சர் ஒரு விசேட தெரிவுக் குழு முறைமைக்கு முன்மொழிந்தார். அது குழுநிலை விவாதத்தின்போது சமர்ப்பிக்கப்படும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.










