( ஐ. ஏ. காதிர் கான் )
தேசிய ரீதியில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடையிலான
“முஸ்லிம் கலாசார, பாரம்பரிய போட்டி – 2025” நிகழ்வுகளின் ஓர் பிரிவாக, கஸீதா – இடை நிலைப் பிரிவு பெண்கள் குழுவினருக்கு இடையே, கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சியில், அக்கரைப்பற்று பாயிஸா மகா வித்தியாலய மாணவிகள் குழுவினர் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டியில் திறமைகளை வெளிப்படுத்தி, பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ள நிதா ஸீனத், மிஹ்னாஸ், ஸுப்றா இஸ்ஸத், லம்யா, ஸதீம், இஸ்ஸத் லீனா, அறீபா ஆகிய மாணவிகளை பாயிஸா மகா வித்தியாலயம் சார்பில், அதிபர் மௌலவி எம்.கே. அஹமட் ஸியாத் பாராட்டியுள்ளார்.










