ராகம, படுவத்தை பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.
சபுகஸ்கந்த பகுதியில் உள்ள பாடசாலையை சேர்ந்த சாரணர் குழுொன்று படுவத்தை மகா வித்தியாலயத்தில் நடந்த ஜம்போரி நிகழ்ச்சியிலில் பங்கேற்று திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து வீதியோர தடுப்பில் மோதி கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், பேருந்தின் தடுப்பான் செயலிழந்தது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 20 மாணவர்கள் பயணித்துள்ளனர்.
ராகம பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










