கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த மூலதன சந்தையின் மதிப்பு இன்று (14) 8 டிரில்லியன் ரூபாய் என்ற அளவைத் தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதே நேரத்தில், அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் (ASPI) இன்றைய வர்த்தகத்தின் முடிவில் 22,372.57 புள்ளிகளில் நிறைவடைந்தது, இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 51.49 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
S&P SL20 விலைச்சுட்டெண் இன்று 22.07 புள்ளிகள் அதிகரித்து இந்த ஆண்டின் அதிகபட்ச அளவான 6,229.44 புள்ளிகளை எட்டியது.
இன்று 5.74 பில்லியன் ரூபாய் மொத்த புரள்வாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.