கொழும்பு தேசிய வைத்தியசாலையிலுள்ள மூன்று எம்.ஆர்.ஐ ஸ்கேனர்கள் செயலிழந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒரேயொரு எம்.ஆர்.ஐ ஸ்கேனர் மட்டும் செயல்பாட்டில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்ததோடு, இந்தச் சூழ்நிலையால் நோயாளி பராமரிப்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல் கண்டி வைத்தியசாலையில் சிறுநீரக கற்களை உடைக்கும் இயந்திரம் ஒரு வருடத்துக்கு முன்பு வாங்கப்பட்டு இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.