இஸ்மதுல் றஹுமான்
கட்டான பொலிஸ் பிரதேசத்தில் இயங்கும் சர்வதேச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
படுகாயமடைந்த மாணவன் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார்.
13ம் திகதி திங்கட்கிழமை பாடசாலை நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
10ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே மேல் மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
தவறி விழுந்ததா யாரும் தல்லிவிட்டார்களா என இதுவரை தெரியவரவில்லை.
கட்டான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.