ஏ.எஸ்.எம்.ஜாவித் 2025.10.13
சமய விவகார பிரதியமைச்சர் முனீர் முளப்பர் 13.10.2025 உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை ஏற்றுக் கொண்டார்.
கொழும்பு 10 மருதானையில் அமைந்துள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் நேற்று புத்தசாசனஇ மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பதில் பணிப்பாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.அநிருத்தனன்இ கத்தோலிக்க மத கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி சத்துரி பிண்டோஇ நான்கு சமயத் தலைவர்கள்இ முஸ்லிம்இ இந்துஇ கத்தோலிக்க திணைக்கள அதிகாரிகள் மற்றும் புத்தசாசனஇ மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நான்கு சமயத் தலைவர்களின் சமய அனுஸ்டானங்களின் பின்னர் தனது கடமையைப் பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.