குருநாகல், குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பபொலேவெல, குடா கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 34 வயதானவர்.
உயிரிழந்தவர் அவரது சகோதரனின் வீட்டில் மற்றுமொரு குழுவினரோடு மது அருந்திக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாத்தையடுத்து, சகோதரனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான உயிரிழந்தவரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.