கொழும்பு மாநகர சபை மதிப்பீட்டு வரிகளில் நிலுவைத் தொகையாக ரூ.4 பில்லியனுக்கும் அதிகமாக வசூலிக்க வேண்டியுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) தெரியவந்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் அதிகாரிகள் சமீபத்தில் கோபா குழுவின் முன் அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.