பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை,கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தின், சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண் சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை – தர்மபுரம் பொதுச்சந்தை நீரில் மூழ்கியுள்ளதாக நாம் கன்டரிந்தோம்