போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. கே. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் 10.10.2025 காலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவினால், இதற்கான நியமனக் கடிதம் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. கே. பெரேராவுக்கு வழங்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. கே. பெரேரா முன்னர் பணியாற்றினார்.