நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தற்போதைய மேலதிக செயலாளர் இன்று (08) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான, ராஜபக்ஷ பத்திரகே செபாலிகா சமன் குமாரி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சந்தேகநபர் முன்னதாக இழப்பீட்டு அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ள நிலையில், அதன்போது ஊழல் மற்றும் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றவியல் முறைகேடுகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.