வழக்குத் தாக்கல் செய்தல் தொடர்பில் அனுபவம் கொண்ட 15 வருடகால சட்டத்தரணியாக அனுபவம்பெற்ற சட்டத்தரணியொருவரையே கோரியிருந்தார்கள். ஆனால் ரங்க திசாநாயக்க இந்தப் பதவி வெற்றிடத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
இருந்தபோதும், அவருக்கு குற்றவியல் வழக்குத் தாக்கல் தொடர்பில் ஒரு நாள் அனுபவம் கூட இல்லை. அடிப்படை தகுதியில்லாமல் ஒருவர் பதவி வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்கிறார் என்றால், யாராவது ஒருவர் அவருக்கு பதவியை பெற்றுக்கொடுப்பதற்கான வாக்குறுதியை பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.
இந்தப் பதவிக்கான நேர்முகப் பரீட்சையின்போது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரியொருவரான மாதவ தென்னக்கோன் என்பவரே அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். ஒருபுறம், அவர் குற்றவியல் வழக்குத் தாக்கல் தொடர்பில் 27 வருடகால அனுபவம்கொண்ட அதிகாரியாவார். இரண்டாவதாக, மேல்நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். பேராசிரியர் தினேஷா சமரரத்ன இருவர் தொடர்பிலும் இரு பிரச்சினைகளை எழுப்பியுள்ளார். ரங்க திசாநாயக்கவை பரிந்துரைத்த இருவரும் ஆளுநர்கள். எனவே, அரசியல்வாதிகளின் பங்களிப்புடன் பதவிக்கு வந்த இவர் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவாரா?.
தற்போது ரங்க திசாநாயக்கவை பாதுகாக்க சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தலையீடு செய்து வருகிறார். ரங்க திசாநாயக்கவை பதவிக்கு பரிந்துரை செய்ததன் பின்னரே அவர்கள் இருவரும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். ஜனாதிபதி பதவியேற்று 48 மணிநேரத்தில் ஆளுநர்களை தெரிவு செய்திருக்கிறார். ஆனால், சரியான தகவலின் அடிப்படையில் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு பெயரொன்றை பரிந்துரை செய்ய அரசியலமைப்புச் சபைக்கு வாய்ப்பை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், ஜனாதிபதி இந்தக் கடிதத்தை கவனத்திற்கொள்ளாமல் ரங்க திசாநாயக்கவை பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தெரிவு செய்திருக்கிறார்’’ என்றார்.