அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின்போது 135 கடைகளைச் சேர்ந்த வணிகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், தேவையான அளவை விட அதிகமாக அரிசி கையிருப்புகளை விற்பனை செய்ய மறுத்து அவற்றை மறைத்து வைக்கும் வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அவ்வாறு மறைத்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு பறிமுதல் செய்யப்படுமென்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.










