தனமல்வில – வெல்லவாய பகுதியில் உள்ள 288வது தூண் அருகே இன்று (03) காலை நடந்த விபத்தில் வேனில் இருந்த ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனமல்விலவிலிருந்து வெல்லவாய நோக்கிச் சென்ற வேன், வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, ஒரு மா மரம் மற்றும் ஒரு தேக்கு மரத்தில் மோதியுள்ளது. வேனின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் பலத்த காயமடைந்து பின்னர் தனமல்வில பிராந்திய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபின்னர் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளை, டி ஹதர எலவைச் சேர்ந்த குலவர்தன ரலஹமிலகே வன்சதிலக (56) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஐந்து பேரில் மூன்று பேர் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையிலும், இரண்டு பேர் தனமல்வில பிராந்திய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.