பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் 30.09.2025 முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை எனத் தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனம் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
இதன் காரணமாக, பல்கலைக்கழகங்களின் விரிவுரைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் நாட்டில் இருந்து வௌியேறிய பின்னணியில் காணப்படும் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காமை, சம்பளப் பிரச்சினை, ஆராய்ச்சிக்கான நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு கோரி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பணிப்புறக்கணிப்பு காரணமாக, கொழும்பு, பேராதனை, ருஹுணு, ரஜரட்ட, யாழ்ப்பாணம் உட்பட நாடு முழுவதும் உள்ள பல அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரைகள் உட்பட அனைத்து கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

September 30, 2025
0 Comment
108 Views









