சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த தாய்வான் 1949ஆம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது.
ஆனால், மீண்டும் தாய்வானை தனது ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கும் முயற்சியில் சீனா தீவிரம் காட்டி வருகிறது.
சீனாவின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் தாய்வானின் மக்கள் தொகை மிகவும் குறைவாகும். எனவே மக்கள் தொகையை அதிகரிப்பதற்கு தாய்வான் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, தாய்வானில் ஒரு குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 1 இலட்சமும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் ரூபாய் 2 இலட்சமும் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த பரிசுத்தொகையானது, ஒரு குழந்தைக்கு ரூபாய் 3 இலட்சமாகவும் இரட்டைக் குழந்தைகளுக்கு ரூபாய் 6 இலட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.










