மருந்து, கால்நடை மருந்து, ஆயுர்வேத மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தித் துறை தொடர்பான வரவு செலவுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் 18.09.2025 காலை ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்திற்கு மருந்து, கால்நடை மருந்து, ஆயுர்வேத மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தித் துறை முழு ஆதரவையும் வழங்கும் என்று இந்தக் கலந்துரையாடலில் அவர்கள் தெரிவித்தனர்.
மருந்து, கால்நடை மருந்து, ஆயுர்வேத மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தித் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கென பல பயனுள்ள பரிந்துரைகளை அவர்கள் முன்வைத்தனர்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது அந்த அனைத்து முன்மொழிவுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும், தேவைப்பட்டால் தரமான பொருட்களை உற்பத்தி செய்ய புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மருந்து, கால்நடை மருந்து , ஆயுர்வேத மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

September 18, 2025
0 Comment
51 Views









